வியாழன், 1 ஆகஸ்ட், 2013

கண்கள்


அன்னையின் கண்ணில் அகப்பட்டது  அன்பு!
அண்ணலின் கண்ணில் தென்பட்டது விடுதலை!
கம்பனின் கண்ணில் பட்டது காவியம்!


இராசராமனின் கண்ணில் பட்டது சதி!
இராமசாமியின் கண்ணில் பட்டது பகுத்தறிவு!
தமிழனின் கண்ணில் படாதது சுயமறியாதை!


கவிஞர் கண்ணில் பட்டது காதல்!
பக்தனின் கண்ணில் படாதது கடவுள்!
தெரேசா கண்ணில் பட்டது கல்கத்தா சேரி!


விவேகாநந்தனுக்கு கண்ணில் பட்டது
சிகாகோ சகோதர சொகோதரி!
ஐயகோ என் கண்ணில் படுவது எல்லாம்
வேறு மாதிறி… ஏனோ?

சிவகுமார்
17.03.2011